shadow

ஏரியா குத்து பாடல்களுடன் திரும்ப வந்துள்ளேன். சந்தோஷ் நாராயணன்

முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தற்போது தனுஷ் நடித்து முடித்துள்ள ‘வடசென்னை’ படத்தின் இசைப்பணியை முழுவதுமாக முடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

`வடசென்னை படத்திற்கு இசையமைத்து முடித்துவிட்டேன். வெற்றிமாறனின் இந்த பிரம்மாண்ட படைப்பில் நானும் ஒருவனாக இருப்பதை கவுரவமாக நினைக்கிறேன். படத்திற்காக கடுமையாக உழைத்த நடிகர் தனுஷுக்கு வாழ்த்துக்கள். துடிப்பும், வேடிக்கையும் அடங்கிய ஏரியா குத்து பாடல்களுடன் திரும்ப வருவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்’. என்று கூறியிருக்கிறார். எனவே இந்த படத்தில் ஒரு அதிரடி குத்துபாடலை தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். முக்கிய கதபாத்திரங்களில் அமீர், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவான், சுப்ரமணியன் சிவா, சீனு மோகன், டேனியல் அனி போப் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படம் ஆகஸ்ட்டில் வெளியாக இருக்கிறது. #VadaChennai #Dhanush

Leave a Reply