shadow

விஜய்சேதுபதி மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்

விஜய்சேதுபதியின் ‘96’ திரைப்படம் வரும் அக்டோபர் 5ஆம் தேதி வெளீயாவதால் மற்ற படங்களுக்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வரும் அக்டோபர் 5-ந் தேதி உதயா நடித்துள்ள உத்தரவு மகாராஜா, சமுத்திரக்கனியின் ஆண்தேவதை, ஜெய் நடித்துள்ள ஜருகண்டி, விஷ்ணு விஷாலின் ராட்சசன், விவேக்கின் எழுமின் ஆகிய 5 படங்களைள் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தன

இந்த நிலையில் விஜய்சேதுபதி-திரிஷா நடித்துள்ள ‘96’, விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘நோட்டா’ ஆகிய படங்களும் 5-ந் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த இரண்டும் பெரிய படங்கள் என்பதால் மற்ற 5 படங்களுக்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்காமல் அவற்றை தள்ளிவைக்கும் சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளன. இந்த படங்களின் தயாரிப்பாளர்கள் சங்கத்தில், புகார் அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *