shadow

yennai arindhaal2014ஆம் ஆண்டை போலவே 2015ஆம் ஆண்டும் தல வருடம் என அஜீத் ரசிகர்கள் டுவிட்டரில் டுவிட் செய்து வருகின்றனர்.

2014ஆம் ஆண்டின் முதல் நாள் அதாவது புத்தாண்டு தினத்தின் அஜீத்தின் டிரைலர் சன் டிவியில் முதன்முதலாக வெளிவந்தது. அதேபோல் வரும் 2015ஆம் ஆண்டின் முதல் நிமிடத்திலேயே அதாவது ஜனவரி 1ஆம் தேதி அதிகாலை 12 மணிக்கே ‘என்னை அறிந்தால்’ படத்தி\ன் டிரைலர் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வீரம் திரைப்படம் 2014ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியானது. இதையடுத்து 2015ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் வெளியாகவுள்ளது.

ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவான வீரம் திரைப்படம் மொத்தம் ரூ.130 கோடி வசூல் செய்து தயாரிப்பாளர்களுக்கும், விநியோகிஸ்தர்களுக்கும் பெரும் லாபத்தை பெற்றுக்கொடுத்தது. அதேபொல் ‘என்னை அறிந்தால்’ படத்தை வீரம் படத்தை விட இருமடங்கு வெற்றியை பெற்றுத்தருவோம் என அஜீத் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் சவால் விட்டு வருகின்றனர். அஜீத் ரசிகர்களின் சவால் இந்த படத்திற்கு போட்டியாக வரும் ‘ஐ’ படக்குழுவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் வீரம் ரிலீஸான தியேட்டர்கள் அனைத்தும் என்னை அறிந்தால் படத்தை ரிலீஸ் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply