shadow

vijay and rajini
சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆன ‘லிங்கா’, படம் ரிலீஸ் ஆன சில மணி நேரங்களில் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததால் பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரில் ரஜினியை மிக மோசமாக சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை பெற முயற்சி செய்துகொண்டிருக்கும் விஜய்யின் ரசிகர்கள் ரஜினியை கேவலமான வார்த்தைகளால் விமர்சித்து வருவதால் டுவிட்டரில் ஸ்டேட்டஸ் போர் நடந்து வருகிறது.

ரஜினி சூப்பர்ஸ்டார் பட்டத்தை குசேலன் படத்தோடு இழந்துவிட்டார். இனி விஜய்தான் சூப்பர்ஸ்டார் என்று டுவிட்டரில் விஜய் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். 12 நாளில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை புரிந்த கத்தியின் சாதனையை இனி எந்த நடிகராலும் முறியடிக்க முடியாது என்றும், எனவே இனிமேல் விஜய்யை யாரும் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று சொல்ல வேண்டாம், இப்போதே அவர்தான் சூப்பர்ஸ்டார் என்றும் டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் லிங்கா படத்துடன் அஜீத்தின் என்னை அறிந்தால் டீசர் திரையரங்குகளில் வெளியிட்டதை சுட்டிக்காட்டி நாயுடன் அஜீத் கைகோர்ப்பது போன்ற படங்களை போட்டு அஜீத்தையும் விஜய் ரசிகர்கள் வம்புக்கு இழுத்துள்ளனர்.

விஜய் ரசிகர்களின் ஒருசிலரின் இந்த நடவடிக்கைக்கு ரஜினி மற்றும் அஜீத் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருவதால் டுவிட்டரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply