shadow

விக்ரம் வேதா’ படத்திற்கு ‘A’ சான்றிதழ். படக்குழுவினர் அதிர்ச்சி

மாதவன், விஜய்சேதுபதி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்த ‘விக்ரம் வேதா’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் இந்த படம் நேற்று சென்சாருக்கு சென்றது.

இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ‘A’ சான்றிதழ் அளித்துள்ளனர். இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. ‘A’ சான்றிதழ் என்றால் படத்தை தொலைக்காட்சிக்கு விற்க முடியாது, மேலும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் படம் பார்க்க அனுமதி கிடைக்காது. எனவே படத்தின் வசூலும் வருமானமும் மிகப்பெரிய அளவில் குறையும் என்பதால் படக்குழுவினர் மறுதணிக்கைக்கு செல்ல முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படம் ஜூலை 7ஆம் தேதி ரிலீஸாகும் என்று இருந்த நிலையில் தற்போது திரையரங்குகள் ஸ்டிரைக் மற்றும் மறுதணிக்கை காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply