144 தடை உத்தரவை மீறியதாக கமல் மீது வழக்குப்பதிவு

தூத்துகுடி துப்பாக்கி சம்பவத்தில் உயிரிழந்தோர்களின் குடும்பத்தினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கவும், இந்த கலவரத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறவும் இன்று சென்னையில் இருந்து நடிகரும் மக்கள் நீதி கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனி விமானம் மூலம் தூத்துகுடி சென்றார்

அங்கு அவர் தன்னுடைய ஆதரவாளர்களுடன் அரசு மருத்துவமனை சென்று அங்கு காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் பலியானவர்களின் குடும்பத்தினர்களை சந்தித்து அவர்களுடைய சோகத்தில் பங்கெடுத்தார்.

இந்த நிலையில் தூத்துகுடியில் இன்று காலை மீண்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மீறி கமல்ஹாசன் நடந்து கொண்டதாக தூத்துகுடி காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *