shadow

Untitled-18சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே படத்தில் குத்துச்சண்டை போட்டியை இழிவு படுத்தும் காட்சிகள் இருப்பதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், சிவகார்த்திகேயன் உள்பட படத்தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோர்களுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவில், “சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே படத்தில் குத்துசண்டையை இழிவுபடுத்தும் காட்சிகள் பல இருக்கின்றன. குத்து சண்டை போட்டியில் வெற்றி பெற காதலியை அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்பது, போட்டி குத்துசண்டை வீரருடன் வெற்றிக்காக கெஞ்சுவது, மற்றும் போதை மருந்து உட்கொண்டு குத்துச்சண்டையில் கலந்துகொள்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

உலகம் முழுவதும் பிரபலமான ஒரு வீர விளையாட்டை கேலிக்கூத்தாக்கும் வகையில் சினிமாவில் காட்டி, குத்துச்சண்டையை இழிவு படுத்திய நடிகர் சிவகார்த்திகேயன், இந்த படத்தை தயாரித்த ஏ.ஆர்.முருகதாஸ், வசனம் எழுதி இயக்கிய திருமுருகன், நடிகர்கள் வம்சி கிருஷ்ணா ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சென்னை ஜார்ஜ் டவுண் 15வது கோர்ட் நீதிபதி சம்மந்தப்பட்ட அனைவரும் வரும் 30ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

வெளிநாட்டில் குத்துச்சண்டையை இழிவு படுத்திய ஒருவருக்கு ஆறு ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கிலும் கிருஷ்ணமூர்த்தியின் புகார் நிரூபிக்கப்பட்டால் சிவகார்த்திகேயன் உள்பட அனைவருக்கும் 6 ஆண்டுகள் சிறைதண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply