shadow

geneliaவிஜய்யுடன் சச்சின், ஜெயம் ரவியுடன் சந்தோஷ் சுப்பிரமணியம், தனுஷுடன் உத்தமபுத்திரன், உள்பட பல தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்த பிரபல நடிகை ஜெனிலியாவுக்கு நேற்று மும்பை மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை அவருடைய கணவரும் நடிகருமான ரித்திஷ் தேஷ்முக் டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து ரித்திஷ் தேஷ்முக் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: எங்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது குறித்து நாங்கள் மிகவும்  மகிழ்ச்சியோடு இருக்கின்றோம்’ என்று கூறியுள்ளார். பாலிவுட் மற்றும் கோலிவுட் பிரபலங்கள் இருவருக்கும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகை ஜெனிலியாவுக்கும், பாலிவுட் நடிகர் ரித்திஷ் தேஷ்முக் அவர்களுக்கும் கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் ஜெனிலியா நடிக்கவில்லை.

Leave a Reply