shadow

9

ஹரி இயக்கத்தில் விஷால், ஸ்ருதிஹாசன் நடிக்கும் படத்தின் முதல்கட்ட  படப்பிடிப்பு மும்பையில் முடிந்த பின்னர் தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.

இன்று நடந்த சண்டைக்காட்சியின் படப்பிடிப்பில் விஷாலுக்கு படுகாயம் அடைந்ததாக தகவல்கள் கூறுகின்றன. விஷாலின் சகோதரர் விக்ரம் கிருஷ்ணா, இதை தனது டுவிட்டர் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். விஷாலுக்கு 22 தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும், அவர் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.

விஷாலும் வில்லனும் மோதும் பயங்கர சண்டைக்காட்சியின்போது விஷால் தடுமாறி 10 அடி உயரத்தில் இருந்து கிழே விழுந்துவிட்டதாகவும், அதனால் அவருக்கு படுகாயம் ஏற்பட்டு சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை நடந்துவருவதாகவும் படக்குழுவினர் கூறுகின்றனர். ஆனாலும் விஷாலின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்றும், இதுகுறித்து வரும் வதந்திகளை ரசிகர்கள் நம்பவேண்டாம் என்றும் ஹரி தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.

Leave a Reply