96 திரைப்படம் பெற்ற பெருமைக்குரிய விருது!

விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் இயக்குனர் பிரேம்குமார் இயக்கிய ’96’ திரைப்படம் கடந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது

இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் பிரேம்குமாருக்கு கோலப்புடி ஸ்ரீனிவாஸ் விருது அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு இந்த படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குனர் விருது கிடைத்துள்ளது

சுமார் 20 வருடங்களாக வழங்கப்பட்டு வரும் இந்த விருதை இதற்கு முன் கடந்த 2001ஆம் ஆண்டு வெளிவந்த ‘குட்டி’ என்ற திரைப்படத்திற்காக ஜானகி விஸ்வநாதன் என்பவர் இந்த விருதினை பெற்றார். அதன் பின் தற்போதுதான் பிரேம்குமார் என்ற தமிழ் இயக்குனர் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த விருது ரூ.1.5 லட்சம் ரொக்கம் மற்றும் சான்றிதழுடன் கூடியது என்பதும் இந்த விருது வரும் ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி நடைபெறும் விழாவின்போது பிரேம்குமாருக்கு வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply