shadow

’96’ திரைப்படத்தை பாராட்டி புகழ்ந்த பிரபல கிரிக்கெட் வீரர்

சமீபத்தில் வெளியான விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த ’96; திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தை கோலிவுட் திரையுலகினர் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தை தற்போது ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்காக கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தனது டுவிட்டரில் பாராட்டியுள்ளார். ’96’ திரைப்படத்தை சமீபத்தில் பார்த்ததாகவும், இந்த படத்தின் ஒவ்வொரு ஃபிரேமையும் தான் ரசித்ததாகவும், இந்த படத்தின் அனைத்து பாடல்களும் குறிப்பாக ‘காதலே காதலே’ பாடல் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், அதற்காக
இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த படத்தை தனது சகவீரர்கள் வாஷிங்டன் சுந்தர், அபினவ் முகுந்த் ஆகியோர்களும் ரசித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தை பார்த்த பின்னர் தான் விஜய்சேதுபதி ரசிகராக மாறிவிட்டதாகவும் தினேஷ் கார்த்திக் குறிப்பிட்டுளார்.

 

Leave a Reply