’96’ ‘ராம்’ நடிகருக்கு திடீர் விபத்து! மருத்துவமனையில் அனுமதி

பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த ’96’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான நிலையில் தற்போது அந்த படம் தெலுங்கில் ரீமேக்காகி வருகிறது. இந்த படத்தில் ராம் கேரக்டரில் சர்வானந்த், ஜானு கேரக்டரில் சமந்தாவும் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்றபோது ராம் கேரக்டரில் நடித்து வரும் சர்வானந்த் திடீரென எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கினார். இதில் அவருக்கு கால் மற்றும் தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டதை அடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும் அவர் இன்னும் இரண்டு மாதங்கள் அவர் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

’96’ தமிழ்ப்படத்தை இயக்கிய பிரேம்குமார் தான் தெலுங்கு ரீமேக்கையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *