shadow

96 படத்தில் பாடகி ஜானகி நடித்த காட்சிகள்: படத்தில் இடம்பெறாத காட்சி

விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியான ’96’ திரைப்படத்தில் பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி நடித்த காட்சி இருந்தது. ஆனால் படத்தின் நீளம் காரணமாக இந்த காட்சி படத்தில் இடம்பெறவில்லை. இந்த நிலையில் தற்போது இந்த காட்சி இணையதளங்களில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த காட்சியில் விஜய்சேதுபதியும், த்ரிஷாவும் சென்னையின் சாலை ஒன்றில் நடந்து செல்லும்போது பாடகி எஸ்.ஜானகியின் வீட்டை விஜய்சேதுபதி த்ரிஷாவிடம் காண்பிப்பார். அப்போது தற்செயலாக அங்கு வரும் ஜானகி இருவரையும் வீட்டுக்கு அழைத்து சென்று அவர்களுடன் சில நிமிடங்கள் பேசும் காட்சி உள்ளது.

மேலும் இந்த காட்சியில் ஜானு கேரக்டரில் நடித்த த்ரிஷாவுக்கு ஜானகி பாட்டு பாட சொல்லி கொடுப்பது போன்று உள்ளது. மிக அருமையாக உள்ள இந்த காட்சியை இயக்குனர் படத்தில் இடம்பெறாமல் செய்துவிட்டது ஆச்சரியத்தை அளித்துள்ளது

 

Leave a Reply