96 படக்குழுவினருக்கு பார்த்திபன் கொடுத்த வித்தியாசமான பரிசு !

சென்ற வருடம் அக்டோபர் மாதம் விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான 96 படம் நல்ல வரவேற்ப்பையும் வசூலையும் பெற்றது . இந்த படத்தின் 100வது நாள் வெற்றிவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விஜய்சேதுபதி , திரிஷா , இயக்குனர் பிரேம்குமார் , இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் சிறப்பு விருந்தினர்களாக சமுத்திரக்கனி, திருமுருகன் காந்தி, பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பார்த்திபன் 96 படக்குழுவினருக்கு 9 மற்றும் 6 ஆகிய இரண்டு முள்கள் மட்டுமே இருக்க கூடிய கடிகாரத்தை படக்குழுவினர் அனைவர்க்கும் பரிசாக வழங்கினார்.

மேலும் பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் இயற்கையாக சினிமாவை காதலிப்பவன் என்பதால்…. ‘ ஊரார் வெற்றியை ஊக்கி வளர்த்தால், தன் படம் தானாய் வளரும் ‘ என்பதால் என் செலவில் ஒரு கேடயம் வழங்கினேன் என்று கூறியுள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *