சவுதி அரேபியாவின், மேற்கு பகுதியில் வசிப்பவர் படிக் அல் தகாபி. இவருக்கு வயது 90.

இவருடைய மனைவி நீண்ட நாட்களாக உடல் நல பாதிப்பால் அவதிப்பட்டு அண்மையில் காலமானார். மரணப்படுக்கையில் இருந்தப்போது இவரது மனைவி, தான் இறந்தப்பிறகு அவரது கணவருக்கு கண்டிப்பாக மறுமணம் செய்துவைக்க வேண்டுமென விருப்பம் தெரிவித்தார். இது நடந்த சில நாட்களிலேயே தகாபியின் மனைவி இறந்துவிட வேறொரு பெண்ணை மணக்க அவர் விரும்பவில்லை.

இதையடுத்து இறக்கும் தருவாயில் தாய் சொன்னதை நிறைவேற்றவேண்டுமென்ற எண்ணத்தில் தகாபியின் பிள்ளைகள் அவரிடம் பேசினர்.

மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்ற எண்ணிய தகாபியும் மறுமணத்திற்கு ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து தங்களது தந்தைக்கு பெண் தேடிய அவரது பிள்ளைகள் 53 வயது விதவைப் பெண்ணிடம் பேசி, திருமணத்திற்கு சம்மதம் பெற்றனர்.

மிக விமர்சையாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் ஏராளமான உறவினர்கள் பங்கேற்றனர்.

தந்தைக்கு திருமணம் செய்து வைத்ததன் மூலம், தாயின் கனவை நிறைவேற்றி விட்டதாக தகாபியின் ஐந்து மகள்களும், ஏழு மகன்களும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *