shadow

8வது ‘யூ’ சான்றிதழ் பெற்ற இயக்குனரின் படம்

விவசாயிகளின் வாழ்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் கடைக்குட்டி சிங்கம். .கார்த்தி நடிக்கும் இப்படத்தை நடிகர் சூர்யா தயாரிக்கிறார் .பாண்டிராஜ் இயக்குகிறார் .இதில் ரேக்ளா ரேஸ் காட்சி இடம் பெற்றுள்ளது .அதற்கு முதலில் விலங்குகள் நலவாரியம் எதிர்ப்பு தெரிவித்தது .பட குழுவினர் விளக்கம் அளித்தனர் .அதன்பிறகே அக்காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது .

சமீபகாலமாக தணிக்கைக்கு வரும் பெரும்பாலான படங்கள் யு/ஏ அல்லது ஏ சான்றிதல்தான் பெறுகின்றன .ஆனால் பாண்டிராஜ் இதுவரை இயக்கிய படங்களில் ஏற்கனவே 7 படங்களுக்கு யு சான்றிதல் பெற்றிருக்கிறார் .தற்போது 8-வது முறையாக தனது படத்துக்கு யு சான்றிதல் பெற்றதன் மூலம் திரையுலகினரின் கவனத்தை இழுத்திருக்கிறார் பாண்டிராஜ் .இப்படத்தில் சாயிஷா , சத்யராஜ் , சூரி , பானுப்ரியா , விஜி சந்திரசேகர் ஆகியோரும் நடித்திருக்கின்றனர் .

Leave a Reply