shadow

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு: மொத்தம் 571 என்பதால் பதட்டம்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் சற்றுமுன் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 571 ஆக உயர்ந்துள்ளதால் தமிழகத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 86 பேர்களில் 85 பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என்பதால் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தவிர தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு என்பது ஒரு ஆறுதலான தகவல் ஆகும்.

மேலும் 28 நாட்கள் கண்காணிப்பில் எப்போது வேண்டுமானாலும் கொரோனா உறுதியாகலாம் என்றும், 2 முறைக்கு மேல் சோதனையில் இல்லை என்று முடிவு வந்தபிறகே வீட்டிற்கு அனுப்புவோம் என்றும், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமான பரிசோதனை மையங்கள் உள்ளதாகவும் பீலா ராஜேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *