shadow

பாகிஸ்தான் சிறையிலிருந்த 86 இந்திய மீனவர்கள் விடுதலை. இன்று இந்தியா திரும்புவார்களா?

pakistanபாகிஸ்தான் சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 86 பேர்களை பாகிஸ்தான் அரசு நல்லெண்ண அடிப்படையில் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் இன்று இந்தியா திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

பாகிஸ்தான் கடல் எல்லையில் மீன் பிடித்ததாக சமீபத்தில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 86 பேர் கராச்சி சிறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்திய அரசு அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாக அவர்களை விடுவிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்தது. விடுவிக்கப்பட்ட 86 மீனவர்களும் கராச்சி அருகில் உள்ள மலிர் சிறையிலிருந்து லாகூருக்கு ரயில் வழியாக அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் இன்று வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர் என கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த 6ஆம் தேதி நல்லெண்ண அடிப்படையில் லந்தி சிறையில் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக அடைக்கப்பட்டிருந்த 86 மீனவர்கள் மற்றும் ஒரு இந்தியரை பாகிஸ்தான் அரசு விடுவித்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக இந்திய மீனவர்கள் 86 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இன்னும் பாகிஸ்தான் சிறையில் 363 இந்திய மீனவர்கள் அடைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களை விடுவிக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply