shadow

800 வருடங்களுக்கு முந்தைய மொபைல் போன் கண்டுபிடிப்பு. வேற்று கிரகத்தினர் விட்டு சென்றதா?
mobile
ஆஸ்திரியா நாட்டில் களிமண்ணால் ஆன மொபைல் போன்ற ஒரு பொருள் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நோக்கியா மொபைல் போன் வடிவத்தில் இருக்கும் இந்த பொருள் 800 வருடங்களுக்கு முந்தியது என்று கூறப்படுகிறது.

வேற்றுகிரகத்தினர் யாராவது 800 வருடங்களுக்கு முன் பூமிக்கு வந்து இந்த பொருளை தவற விட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மொபைல் போன் போன்றே பட்டன்கள் இந்த பொருளில் இருப்பதால் வேற்று கிரகத்தினர் 800 வருடங்களுக்கு முன்பே மொபைல் போனை உபயோகப்படுத்தியிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பொருளை அகழ்வாராய்ச்சியினர் ஆய்வு செய்து வருவதாகவும் இதுபோன்ற வேறு ஏதேனும் பொருட்கள் இந்த பகுதியில் இருக்குமா? என்பது குறித்து ஆய்வு செய்ய ஆஸ்திரியா அகழ்வாராய்ச்சி துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து வீடியோ ஒன்று யூடியூபில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நமது சென்னை டுடே நியூஸ் வாசகர்களுக்காக அந்த வீடியோவை இங்கு பதிவு செய்துள்ளோம்.

Chennai Today News: 800-year-old mobile phone left behind by Aliens, according latest absurd claims of conspiracy theorists

Leave a Reply