shadow

80 வயது மகனை கவனித்து கொள்ளும் 90 வயது தாய்: ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்

தாய், தந்தைக்கு வயதாகிவிட்டால் முதியோர் இல்லத்திற்கு அனுப்பிவிடும் மகன்கள் ஆயிரமாயிரம் உள்ளனர். ஆனால் இதுவரை எந்த தாயாவது தன்னுடைய மகனை கைவிட்டதாக வரலாறு கிடையாது.

இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த லிவர்பூல் என்ற பகுதியை சேர்ந்த மோஸ்வியூ என்ற 98 வயது மூதாட்டி முதியோர் இல்லத்தில் கடந்த சில வருடங்களாக வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் தன்னுடைய 80வயது மகன் இன்னொரு முதியோர் இல்லத்தில் சேர்ந்திருப்பதாக தெரியவந்ததும் உடனே மகன் இருக்கும் முதியோர் இல்லத்திற்கு சென்றுவிட்டார். அங்கே தனது மகனை அவர் தினமும் கவனித்து வருகிறாராம். காலையில் குட்மார்னிங் சொல்வது முதல் இரவு குட்நைட் சொல்வது வரை இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பதை கண்டு முதியோர் இல்ல நிர்வாகிகளே ஆச்சரியம் அடைந்துள்ளனர். தாய்-மகன் பாசம் எந்த வயதிலும் இருக்கும் என்பதற்கு இதைவிட ஒரு உதாரணம் தேவையா?

Leave a Reply