சட்டவிரோதமாக குடியேற கண்டெய்னரில் அமெரிக்கா வந்த 9 பேர் மூச்சு திணறி பலி

மெக்சிகோவில் இருந்து அண்டை நாடான அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கானோர் குடியேறி வருவதால் இரு நாடுகளுக்கு இடையே சுவர் எழுப்ப அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார்.

இந்த நிலையில் நேற்று மூடப்பட்டிருந்த கண்டெய்னரில் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு நுழைய முயன்ற மூன்று பேர் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மெக்சிகோவில் இருந்து அமெரிக்கா செல்லும் கண்டெய்னர் ஒன்றில் 30 பேர் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு சென்றுள்ளனர். ஆனால் கண்டெய்னரில் போதுமான காற்று வசதி இல்லாததால் மூச்சிவிட முடியாமல் சிரமப்பட்ட அவர்களில் அடுத்தடுத்து 9 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கண்டெய்னர் லாரி டிரைவரை கைது செய்தனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *