8.65 சதவீத பிஎப் வட்டி விகிதத்துக்கு நிதி அமைச்சகம் ஒப்புதல்

கடந்த நிதி ஆண்டுக்கான பிஎப் வட்டி விகிதத்துக்கு நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இதனால் 4 கோடி பிஎப் சந்தாதாரர்கள் பயனடைவார்கள். கடந்த நிதி ஆண்டுக்கான பிஎப் வட்டி விகிதத்தை (8.65 சதவீதம்) பிஎப் அறங்காவலர் குழு அறிவித்தது. இருந்தாலும் விதிமுறைகளின்படி மத்திய நிதி அமைச்சகத்தின் அனுமதிக்கு பிறகுதான் செயல்படுத்த முடியும்.

பிஎப் அமைப்பு 8.65 சதவீத வட்டியை வழங்கலாம். ஆனால் நிதிப் பற்றாக்குறை இல்லாமல் இருப்பது அவசியம் என நிதி அமைச்சகம் பரிந்துரைத் திருப்பதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.

முன்னதாக பிஎப் வட்டி விகிதம் சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்துக்கு இணையாக இருக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இது குறித்து பண்டாரு தத்தாத்ரேயா கடந்த வாரம் கூறும் போது, “கடந்த நிதி ஆண்டுக்கு 8.65 சதவீத வட்டி விகிதம் வழங்க முடியும். இந்த வட்டி கொடுத்தால் கூட 158 கோடி ரூபாய் உபரி நிதி இருக்கும். அதனால் இந்த வட்டி கொடுப்பதில் எந்தவிதமான பிரச்சினையும் இருக்காது” என தெரிவித்தார்.

கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் பிஎப் அறங்காவலர் குழு 8.8 சதவீத வட்டியை பரிந்துரை செய்தது. ஆனால் நிதி அமைச்சகம் 8.7 சதவீதம் வழங்க முடிவெடுத்தது. இதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்ததால் 8.8 சதவீதம் வழங்க நிதி அமைச்சகம் ஒப்புக்கொண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *