shadow

8 மணிக்கு தேர்தல், 10.30 மணிக்கு 2ஜி தீர்ப்பு: டென்ஷனில் அரசியல் கட்சிகள்

இன்று நடைபெறும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அதிமுக, திமுக மற்றும் தினகரனின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல் என்பதால் டென்ஷனான தேர்தலாகவே கருதப்படுகிறது. மேலும் இன்று வாக்குப்பதிவு சரியாக 8 மணிக்கு தொடங்கவுள்ள நிலையில் திமுகவின் முக்கிய தலைவர்களான கனிமொழி மற்றும் ஆ.ராசா ஆகியோர் குற்றம் சாட்டப்பட்ட 2ஜி வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளது.

இன்று வெளியாகும் தீர்ப்பு வாக்குப்பதிவிலும் எதிரொலிக்கும் என்பதால் அரசியல் கட்சிகளும் டென்ஷனான மனநிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. 2ஜி தீர்ப்பு திமுகவுக்கு பாதகமாக வந்தால் ஆர்.கே.நகரில் திமுகவுக்கு எதிராக வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

அவ்வாறு எதிரான வாக்குகள் அதிமுகவுக்கு போகுமா? அல்லது தினகரனுக்கு போகுமா? என்பதை யாராலும் கணிக்க முடியாத நிலை உள்ளது. தேர்தல் முடிவு மட்டுமே இதற்கு விடை கூற முடியும்

Leave a Reply