8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த தடை: சென்னை ஐகோர்ட் அதிரடி

8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்தும் பணியில் கடந்த சில மாதங்களாக மாநில அரசு ஈடுபட்டு வருகிறது, ஒருசில இடங்களில் நிலம் தராதவர்கள் காவல்துறையினர்களால் மிரட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்தும் பணிக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஒரு வழக்கு சென்னை ஐகோர்ட்டில் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை ஐகோர்ட் அதிரடியாக தடை விதித்தது

மேலும் மறு உத்தரவு வரும் வரை நிலத்தை கையகப்படுத்தும் பணியை நிறுத்த வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் சேலம் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *