8 தோட்டாக்கள் நாயகனின் அடுத்த படம் ‘ஜீவி

மிஷ்கின் உதவியாளர் ஸ்ரீகணேஷ் இயக்கிய 8 தோட்டாக்கள் படத்தில் நடித்த நடிகர் வெற்றி நடித்துள்ள அடுத்த படம் ‘ஜீவி’

இந்த படத்திற்கு இன்று ‘யூ’ சான்றிதழ் சென்சாரில் இருந்து கிடைத்துள்ளது. இதனையடுத்து இந்த படம் வரும் 28ஆம் தேதி வெளியாக உள்ளது.

வெற்றி ஜோடியாக மோனிகா நடித்திருக்கும் இந்த படத்தில் கருணாகரன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். கோபிநாத் இயக்கத்தில் கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையில் பிர்வீன்குமார் ஒளிப்பதிவில் கே.எல்.பிரவீன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Leave a Reply