அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஏழாவது ஐபிஎல் போட்டிக்கான ஏற்பாடுகளில் ஐபிஎல் நிர்வாகம் இறங்கியுள்ளது.

சம்பள உச்சவரம்பு 60 கோடியாக ஆக்கப்பட்டதைத தொடர்ந்து ஒவ்வொரு அணியும் தங்களின் பழைய வீரர்களில் ஐந்து பேரை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற புதிய விதிமுறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி இந்த ஐவரில் முதல் நிலையில் இருக்கும் வீரர் மூன்று ஆண்டுகளுக்கு 12.5 கோடி சம்பளம் பெறுவார். இரண்டாவதாக வருபவர் 10.5 கோடியும், மூன்றாவது வீரர் 7 கோடியும், நான்காவது வீரர் 5 கோடியும், ஐந்தாவது வீரர் 4 கோடியும் பெறுவார்கள்.  ஐந்து பேருக்கும் 39 கோடி கொடுத்தது போக மீதமிருக்கும் 21 கோடியில்தான் அவர்கள் மற்ற வீரர்களுக்கு ஏலத்தொகையை நிர்ணயிக்க வேண்டும். இதுகுறித்த இறுதி முடிவு விரைவில் கூடவிருக்கும் ஐபிஎல் ஆட்சி மன்றக் குழுவில் முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply