shadow

7 வது ஐ,பி.எல் போட்டிகளின் அட்டவணையை இன்று பிசிசிஐ அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த ஐ,பி.எல் போட்டி மூன்று கட்டங்களாக நடக்க உள்ளது.

முதல் கட்டமாக வரும் ஏப்ரல் 16 முதல் 30 வரை ஐக்கிய அரபு எமிரேட் நாட்டிலும்,

இரண்டாவது கட்டமாக மே மாதம் 1ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை வங்கதேசத்திலும்

அதன்பின்னர் இறுதிக்கட்டமாக மே மாதம் 13ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை இந்தியாவிலும் 15நடைபெற இருக்கின்றது.

இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி ஐ.பி.எல் போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என மத்திய அரசு அறிவித்ததை அடுத்து முதல் இரண்டு கட்டங்களை வெளிநாட்டிலும், இந்தியாவில் தேர்தல் முடிந்ததும் மூன்றாவது கட்ட போட்டிகளை இந்தியாவிலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply