shadow

75 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு

இந்தியாவின் சுதந்திர போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் டிசம்பர் 30, 1943 அன்று போர்ட் ப்ளேயரில் உள்ள செல்லுலார் சிறையின் முன் மூவர்ணக் கொடியை முதன்முறையாக ஏற்றினார். இதன் நினைவாக 75 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தேசியக் கொடியின் 75வது ஆண்டு நினைவைக் கொண்டாடும் வகையில் 75 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட உள்ளது.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் டிசம்பர் 30, 1943 அன்று போர்ட் ப்ளேயரில் உள்ள செல்லுலார் சிறையின் முன் மூவர்ணக் கொடியை முதன்முறையாக ஏற்றினார். இதன் நினைவாக 75 ரூபாய் நாணயத்தை வெளியிட முடிவு செய்துள்ளது மத்திய அரசு.

இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் அந்த நாணயத்தில் சுபாஷ் சந்திர போஸ் படம் பொறிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

35 கிராம் எடையில் 50% வெள்ளி, 40% செம்பு மற்றும் 10% நிக்கல் மற்றும் ஜிங்க் ஆகியவை கலந்து இந்த நாணயம் தயாரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply