71 வருட பிராட்மேன் சாதனையை தகர்த்த விராட் கோஹ்லி

#இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி சற்று முன்னர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டியில் இரட்டைச்சதம் அடித்தார். இதனை அடுத்து அவர் 70 வருட பிராட்மேன் சாதனையை முறியடித்துள்ளார்.

ஒரு அணியின் கேப்டனாக 150க்கும் மேற்பட்ட ரன்களை விராத் மோஹ்லிஒன்பது முறை அடித்து உலக சாதனை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இதற்கு முன் செய்த இந்த சாதனையை பிராட்மேன் செய்த நிலையில் கடந்த 71 வருடங்களாக வேறு யாராலும் முறியடிக்கப்படாத நிலையில் தற்போது விராட் கோலி இந்த சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் ஏழு இரட்டைச் சதம் விளாசிய முதல் இந்திய அணி வீரர் என்ற பெருமையும் விராட் கோலி அவர்களுக்கு கிடைத்துள்ளது

ஆறு வெவ்வேறு அணிகளுக்கு எதிராக இரட்டைச் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் அவருக்கு கிடைத்துள்ளது. மேலும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இரட்டை சதத்தின் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 7 ஆயிரம் ரன்களை விராட் கோலி கடந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இவ்வாறு சாதனை மேல் சாதனை செய்துவரும் விராட் கோலிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *