shadow

school girlsபோஸ்னியா நாட்டில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் இருந்து 28 மாணவிகள் ஐந்து நாட்கள் கல்விச் சுற்றுலாவை மேற்கொண்டனர். அவர்களில் ஏழு மாணவிகள் சுற்றுலா முடித்து திரும்பி வந்தவுடன் கர்ப்பமாக இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.

போஸ்னியா நாட்டில் உள்ள ‘பஞ்சா லுகா’ என்ற நகரில் இருக்கும் பெண்கள் பள்ளி ஒன்றில் இருந்து 28 மாணவிகளும் இரண்டு ஆசிரியர்களும் கல்விச்சுற்றுலாவுக்கு தலைநகர் சரஜீவா நகருக்கு சென்றனர். தலைநகரில் மாணவிகள் ஐந்து நாட்கள் தங்கியிருந்து மியூசியம் உள்பட பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தனர். பின்னர் அனைவரும் வீடு திரும்பினர். ஆனால் சுற்றுலா சென்ற மாணவிகளில் ஏழு பேர் கர்ப்பமாக உள்ளதாக பரிசோதனையில் திடுக்கிடும் தகவல் தெரிய வந்துள்ளது.

கர்ப்பமான மாணவிகள் அனைவரும் 13 முதல் 15 வயதுக்குள் இருந்தனர். சுற்றுலாவின் போது பாதுகாப்புக்கு சென்ற ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் காவல்துறையில் புகார் செய்துள்ளனர். இதனையொட்டி பள்ளி நிர்வாகம் அந்த இரு ஆசிரியர்களையும் சஸ்பெண்ட் செய்துள்ளது.

இந்தசம்பவம் போஸ்னியால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply