shadow

7 ஆண்டுகளில் 25% சிசேரியன் அதிகரிப்பது ஏன்?

2010ஆம் ஆண்டு வரை வெறும் 5% ஆக இருந்த சிசேரியன் பிரசவங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து ஏழே வருடங்களில் 30%ஆக அதிகரித்துவிட்டதாக அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

பொதுவாக கருவுற்ற 40 வாரங்களுக்குள் எந்த நேரத்திலும் சுகப்பிரசவத்திர்கான வலி வந்து குழந்தை பிறக்கும். ஆனால் அதற்கு மேலும் வலி வராவிட்டாலோ, அல்லது குழந்தையை வெளியே எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலோ தான் சிசேரியன் முறை பயன்படுத்தப்படும்

ஆனால் தற்போது ஒருசில மருத்துவமனைகள் கட்டணம் அதிகம் பெற வேண்டும் என்பதற்காக சிசேரியனை பரிந்துரை செய்வதாகவும், ஒருசில தாய்மார்கள் பிரசவ வலியை பொறுத்து கொள்ள முடியாமல் சிசேரியனுக்கு சம்மதிப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற பல காரணங்களால் தான் சிசேரியன் கடந்த 7 ஆண்டுகளில் 25% அதிகரித்துள்ளதாக ஒரு புள்ளிவிபரம் கூறுகின்றது. ஆனால் இன்னொரு ஆய்வு, சுகப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைதான் பின்னாளில் தைரியமான முடிவை எடுப்பவர்களாக இருப்பதாகவும் கூறுகிறது.

Leave a Reply