7 பேர் விடுதலைக்காக கூட்டணியில் இருந்து விலக தயாரா? திமுகவுக்கு ஜெயகுமார் கேள்வி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தற்போது தமிழக கவர்னரின் கையில் உள்ளது.

இந்த நிலையில் 7 பேர் விடுதலைக்கு திடீரென காங்கிரஸ் கட்சி தலைவர்கள் முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். இதனால் 7 பேர் விடுதலையில் சிக்கல் நேருமோ என்ற அச்சம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் அமைச்சர் ஜெயகுமார் இதுகுறித்து கூறியபோது, ‘7 பேர் விடுதலை நீண்டகால கோரிக்கையாகும், இதற்கு திமுக ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

7 பேர் விடுதலைக்காக காங்கிரஸை திமுக நிர்பந்திக்க வேண்டும். காங்கிரஸை வலியுறுத்த ஸ்டாலின் தயாரா ? கூட்டணியில் இருந்து விலகுவோம் என அறிவிக்க தயாரா? இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *