மரணத்திலும் இணைபுரியாத 63 வருட தம்பதிகள். 20 நிமிட இடைவெளியில் உயிர் பிரிந்தது.

1கடந்த 63 வருடங்களாக ஒற்றுமையுடன் வாழ்ந்து இணைபிரியாத தம்பதிகள் என்று பெயர் பெற்று ஒரே நாளில் இருபது நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இருவரும் மரணம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் அமெரிக்காவில் உள்ள South Dakota பகுதியில் நடந்துள்ளது.

அமெரிக்காவின் South Dakota பகுதியில் Henry மற்றும் Jeanette De Lange ஆகிய தம்பதி கடந்த 63 வருடங்களாக இணணபிரியமல் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இருவருமே உடல்நலமின்றி காணப்பட்ட நிலையில் சமீபத்தில் ஒருவர் பின் ஒருவராக 20 நிமிட இடைவெளியில் மரணம் அடைந்தனர்.

இவர்களுக்கு ஐந்து மகன்கள் உள்ளனர். ஐந்தாவது மகன் Lee De Lange தனது பெற்றோரின் மரணம் குறித்து கூறியபோது கடவுள் கூட தங்கள் பெற்றோர்களை பிரிக்க விரும்பாததால் இருவரையும் ஒன்றாக அழைத்துக்கொண்டார் என்று கூறினார். இருவரது உடல்களும் அருகருகே வைக்கப்பட்டு இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *