4 ஆண்டுகளில் 60,000 குழந்தைகள் மாயம். கண்டுபிடிக்க முடியாமல் திணறும் மத்திய அரசு
child missing
கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் சுமார் 60,000 குழந்தைகள் காணாமல் போயிருப்பதாகவும், அவர்களை கண்டுபிடிக்க மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.2.5 கோடி செலவு செய்தும் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிப்பதில் மத்திய அரசு தோல்வி அடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து  பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் உயரதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் இருந்து இதுவரை 194,213 குழந்தைகள் காணாமல் போயிள்ளதாக புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 129,270 குழந்தைகள் மீட்கப்பட்டு உரியவர்களுடன் சேர்த்து வைக்கப்பட்டது. ஆயினும் 64,943 குழந்தைகள் கடந்த நான்கு ஆண்டுகளில் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இவர்கள் அனைவரும் ஜனவரி 2012 முதல் பிப்ரவரி 2016 வரை காணாமல் போனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இயற்கை சீற்றங்கள், சமூக விரோதிகளால் கடத்தல், வீட்டை விட்டு குழந்தைகள் ஓடிவிடுவது போன்ற பல காரணங்கள் குழந்தைகள் காணாமல் போனதற்கு காரணங்களாக கூறப்படுகிறது. இந்தியாவில் மேற்குவங்கத்தில்தான் இதுவரை அதிகளவிலான குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். இந்த மாநிலத்தில் மொத்தம் காணாமல் போன குழந்தைகளின் எண்ணிக்கை 44,095 ஆகும். காணாமல் போன குழந்தைகளை மீட்கவும், குழந்தைகள் காணாமல் போவதை தடுக்கவும், ‘டிராக் சைல்டு’ என்ற இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

Chennai Today News: 60000 Kids Not Found Despite Spending Rs. 2.5 Crore on Missing Children Every Year

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *