தனியார் நிறுவனங்களிலும் பெண்களுக்கு 6 மாதம் பேறுகால விடுமுறை. பாராளுமன்றத்தில் விரைவில் மசோதா தாக்கல்

maternity-leave-lஅரசுத் துறையில் பணியாற்றும் பெண்களுக்கு 26 வாரங்கள் அல்லது 6 மாதம் பேறுகால விடுப்புக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வருவது போல் தனியார் நிறுவங்களில் பணியாற்றும் பெண்களுக்கும் அதே 26 வாரங்கள் பேறுகால விடுப்பு அளிக்க வகை செய்யும் மசோதா விரைவில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கின்றது. இந்த தகவலை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய பேறுகால சலுகை மசோதா குறித்து அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா செய்தியாளர்களிடம் மேலும் கூறியபோது “தற்போது 12 வாரமாக உள்ள பேறுகால விடுப்பை 26 வாரங்களாக அதிகரிப்பதற்கான மசோதா, அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டு, மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றுதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பணிபுரியும் தாய்மார்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான தெரிவை கட்டாயமாக்க முடியாது. சில அமைப்புகள், துறைகளில் அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும். ஆனால், இச்சட்டம் அமலாக்கப்பட்ட பிறகு மற்ற அமைப்புகளில் 26 வார பேறுகால விடுப்பு அவர்களுக்குக் கிடைக்கும்” என்று கூறினார்.

மேலும் இந்த மசோதா பெண்களுக்கு மட்டுமே உரியது என்றும் மனைவி அல்லது வீட்டில் உள்ள பெண்கள் கர்ப்பமான காலத்தில் அவர்கள் குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து இந்த மசோதாவில் எதுவும் இல்லை என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.

6 months of maternity leave for private sector employees

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *