மேலாடை இல்லாமல் பிரிட்டன் இளவரசியை படம்பிடித்த 6 பேர் மீது வழக்கு

kate-middletonபிரிட்டன் இளவரசர் வில்லியம்ஸ் மனைவியும் இளவரசியுமான கேத் மிடில்டன் கடந்த 2012ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்தபோது மேலாடை இல்லாமல் மாடியில் உலாவிய கேத் மிடில்டனை ரகசியமாக படம்பிடித்து பத்திரிகைகளில் வெளியிட்ட 6 பேர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த புகைப்படங்களை எடுத்தவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வில்லியம்ஸ் வற்புறுத்தியதை அடுத்து பிரான்ஸ் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

4 ஆண்டுகள் கழித்து எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையின்படி ஆறு பேர்மீது தற்போது பாரிஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர பிரான்ஸ் அரசு அனுமதித்துள்ளதாகவும், தேவைப்பட்டால் அந்த ஆறு பேர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் பிரான்ஸ் நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *