shadow

6 வயது சிறுவன் ரூ.70 கோடி சம்பாதித்தது எப்படி? ஒரு ஆச்சரிய தகவல்

இணையதளங்கள் தற்போது பொழுதுபோக்கிற்கு மட்டுமின்றி வருமானத்திற்கும் உதவுகிறது என்பதை பலர் அறிந்துள்ளனர். அந்த வகையில் 6 வயது சிறுவன் ஒருவனின் வீடியோ ஒன்று இணையதளங்களில் பதிவு செய்தததால் அதன் மூலம் ஒரு ஆண்டில் 70 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது என்ற செய்தி அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த அதிர்ஷ்டக்கார சிறுவனின் பெயர் ரியான்

ரியான் 3 வயது முதல் தனது விளையாட்டு பொருட்களை வைத்து விளையாடும்போது அவனுடைய பெற்றோர் அதனை வீடியோ எடுத்து யூ டியூபில் அப்லோட் செய்துள்ளனர். இந்த வீடியோ சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களையும் கவர்ந்தததால் அவனின் குழந்தை மொழிக்கு ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் உள்ளனர்.

தற்போது 6 வயது ஆகும் ரியான், தனது வீடியோவுக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளான். மிகச்சிறிய வயதிலேயே யூ டியூப் பிரபலமான ரியானுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அதன் மூலம் ஒரே ஆண்டில் 70 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளான்.

Leave a Reply