6 வயது சிறுமி மரணத்தில் திடீர் திருப்பம்: சித்தியே கொலை செய்தது அம்பலம்

தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரம், திருமலை நகரை சேர்ந்தவர் பார்த்திபன் என்பவரது மனைவி சூரியகலா மற்றும் 6 வயது மகள் ராகவியுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி ராகவி, வீட்டின் 2ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர், சிறுமியை மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்த போது அவள் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் 6 வயது சிறுமி 2வது மாடியில் இருந்து விழுந்து பலியான சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தனது கணவரின் முதல் மனைவியின் குழந்தையை சித்தியே தள்ளிவிட்டு கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து சென்னை அஸ்தினாபுரம் திருமலை நகரை சேர்ந்த பார்த்திபனின் மனைவி சூர்யகலா கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *