shadow

5வது கட்ட சைபர் பாதுகாப்பு பேச்சுவார்த்தையில் இந்தியா-அமெரிக்கா

6வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் சைபர் பாதுகாப்பு என்பது ஒரு நாட்டிற்கு அவசிய தேவை என்றாகிவிட்ட நிலையில் சைபர் பாதுகாப்பு குறித்து இந்தியாவும் அமெரிக்காவும் ஏற்கனவே நான்கு கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்த 5ஆம் கட்ட பேச்சுவார்த்தை புதுடெல்லியில் இந்த வாரம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்காவின் இணைய பிரச்சனைகள் தொடர்பான துறையின் அதிகாரி கிரிஸ்டோபர் பெயிண்டர் தலைமையிலான குழு இந்தியா வருகிறது. சைபர் கூட்டு ஒத்துழைப்பினை மேற்கொள்ளுதல், உள்கட்டமைப்பை பாதுகாக்க சைபர் கிரைம் மற்றும் தவறான சைபர் செயல்பாடுகளை ஒடுக்குதல் ஆகியவை குறித்து இந்த பேச்சுவார்த்தையில் ஆலோசனை செய்யப்பட உள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இரு நாடுகளின் சைபர் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தம் இந்த பேச்சுவார்த்தையின் போது கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, பிரதமர் மோடி 3 நாள் பயணமாக கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது சைபர் பாதுகாப்பில் இருநாடுகளின் உறவை தீவிரப்படுத்தவும் இரு தலைவர்களின் பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply