5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ஏன்? துணை முதல்வர் விளக்கம்

மாணவர்களின் கல்வித்திறன் மேம்படும் என்பதால் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கொண்டு வரப்படுகிறது என துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். ஏற்கனவே 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இருந்து பின்பு நீக்கப்பட்டதாகவும், தற்போது மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

ஆனால் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைமுறையால் முப்பருவக் கல்வி சிதையும் என்றும், மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிக்கும் அபாயம் இருக்கும் என்றும் ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல் அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த பொதுத்தேர்வுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. நீட் போன்ற தகுதித்தேர்வுகளின் மூலம் 12ஆம் வகுப்பு மதிப்பெண்ணே தேவையற்றதாக மாறிக்கொண்டிருக்கிற சூழலில், 5 மற்றும் 8ஆம் வகுப்புகளில் பொதுத்தேர்வு என்பது மாணவர்களை கல்வியிலிருந்து வடிகட்டி உயர்நிலைக் கல்வியையே நிறைவுசெய்யாத நிலைக்கு இட்டுச்செல்லும் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார்.

Leave a Reply