shadow

5134 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

ssc2மத்திய அரசின் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ள 2016-ஆம் ஆண்டிற்கான 5132 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் மற்றும் கிளார்க் (கிரேடு- சி) பணியிடங்களுக்கான அறிப்பை ஸ்டாப் செலக்சன் கமிஷன் (எஸ்எஸ்சி) கடந்த மாதம் அறிவித்திருந்தது. இதற்கு +2 முடித்தவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கு இன்றறே கடைசி தினமாகும்.
பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பதவி: Postal Assistant/Sorting Assistant – 3281
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,900
பதவி: Data Entry Operator – 1321
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,400
பதவி: Lower Division Clerk – 506
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,900
பதவி: Court Clerk – 26
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,900

வயது வரம்பு: 01.01.2017 தேதியின்படி 18 – 27க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படும்

தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் மேல்நிலைக் கல்வி (+2) அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில பணிகளுக்கு ஹிந்தி அல்லது ஆங்கில மொழிகளில் தட்டச்சுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, தட்டச்சு திறன் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண்கள், விதைவகளுக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.ssconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை கணினிப்பிரதி எடுத்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, புதுச்சேரி
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.11.2016
தேர்வு நடைபெறும் தேதி: 07.01.2017, 05.02.2017

Leave a Reply