ஒரே நாளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா: என்னதான் நடக்கின்றது இத்தாலியில்?

கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் ஆதிக்கம் இத்தாலியில் அதிகரித்து கொண்டே வந்த நிலையில் தற்போது நேற்று ஒரே நாளில் மட்டும் 5217 பேர்களுக்கு காரணம் வைரஸ் பாதிப்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

இதனை அடுத்து நாட்டில் மொத்தம் 97 ஆயிரத்து 687 பேர் கொரோனாவால் தாக்கப்பட்டுள்ளனர் என்பதும் 10 ஆயிரத்து 779பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

நேற்று ஒரே நாளில் மட்டும் அந்நாட்டில் 756 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இத்தாலியில் என்னதான் நடக்கிறது என்ற கேள்வி உலக மக்கள் மனதில் எழுகின்றது.

கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் இத்தாலி அரசு என்ன செய்கிறது? என்றும், உடனடியாக இத்தாலிக்கு அண்டை நாடுகள் மற்றும் உலக நாடுகள் உதவ வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்து வருகிறது

Leave a Reply