shadow

500 திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகும் ‘காலா’

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் தனுஷ் தயாரிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள காலா படம் வருகிற 7-ந்தேதி வெளியாகிறது. நெல்லையில் இருந்து மும்பை சென்று வசிக்கும் தாராவி தமிழர்களுக்காக போராடிய தாதாவின் கதை தான் காலா. இதற்கிடையே ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்த பிறகு வெளியாகும் முதல் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. படம் ரிலீசுக்கு இடையே தூத்துக்குடி சென்ற ரஜினி தெரிவித்த கருத்துக்கு வரவேற்பும், எதிர்ப்பும் எழுந்தது. சில அமைப்புகள் காலா படத்துக்கு எதிராக போராட தயாராகி வருகின்றன. தமிழகம் முழுக்க இதுவரை 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் காலா வெளியீட்டை உறுதி செய்திருக்கின்றன. சென்னையில் மட்டும் இதுவரை 45-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் காலா திரையிடப்படுவது உறுதியாகி இருக்கிறது.

தென் மாவட்டங்களில் ரஜினியின் காலா படத்தை புறக்கணிப்போம் என்ற ரீதியில் பரப்பிவருகிறார்கள். சென்னையிலும் சில அமைப்புகள் காலா வெளியாகும் போது படம் வெளியாகும் திரையரங்குகளின் முன்பு போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பது போலீசுக்கு தெரிய வந்துள்ளது. இதனால் காலா படத்துக்கு பாதுகாப்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. காலா வெளியாகும் திரையரங்குகள் எண்ணிக்கை இன்னும் முழுமை அடையவில்லை. எனவே திரையரங்கு எண்ணிக்கை மேலும் கூட வாய்ப்புள்ளதாக திரைப்பட வினியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

காவிரி விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் கர்நாடகத்துக்கு எதிராக கருத்து தெரிவித்து இருப்பதாக கூறி கன்னட அமைப்புகள் கர்நாடகத்தில் ‘காலா’ படத்தை திரையிட அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி உள்ளனர். கர்நாடகத்தில் ‘காலா’ படத்தை திரையிடக் கூடாது என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கும், கன்னட அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து கர்நாடகத்தில் ‘காலா’ படத்தை திரையிட தடை செய்து கர்நாடக வர்த்தக சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. படத்தை ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

Leave a Reply