50 டியூன்கள் போட்டு அஜித்தை திணறடித்த அனிருத்

அஜித் மற்றும் அனிருத் காம்பினேஷனில் ஏற்கனவே வெளிவந்த ‘வேதாளம்’ திரைப்படம் சக்கைபோடு போட்டது. குறிப்பாக அந்த படத்தில் இடம்பெற்றிருந்த ஆலுமா டோலுமா பாடல் உலகம் முழுவதும் ஹிட் ஆகியது. இந்த நிலையில் தற்போது அஜித் நடித்துள்ள ‘விவேகம்’ படத்திற்கும் அனிருத் தான் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் பாடல்களின் பணிகள் முடிந்துவிட்ட நிலையில் தீம் சாங் ஒன்றில் பணியில் கடந்த சில நாட்களாக அனிருத் ஈடுபட்டிருந்தார். மொத்தம் 50 வகையான தீம் பாடல்களை கம்போஸ் செய்த அனிருத், அதை அஜித்திடம் போட்டு காட்டியுள்ளார். இவற்றில் ஒன்றை எப்படி தேர்வு செய்வது என்று சிறிது நேரம் திணறிய அஜித், பின்னர் ஒன்றை செலக்ட் செய்தாராம். அந்த பாடல் ஆலுமா டோலுமா பாடலுக்கு நிகரானது என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் பாடல்கள் உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளதாகவும், மிக விரைவில் இந்த படத்தின் பாடல்கள் ரிலீஸ் தேதியை அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *