.பிரஸ்சல்ஸ் விமான நிலைய ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம். 100 விமானங்கள் ரத்து

Brussels airportபிரேசில் நாட்டில் உள்ள பிரஸ்சல்ஸ் நகரின் விமான நிலையத்தில் சமீபத்தில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல் காரணமாக பலர் பலியான சோக சம்பவம் காரணமாக விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. அதன் பின்னர் இயல்பு நிலை திரும்பிய பின்னர் கடந்த 3ஆம் தேதி முதல் மீண்டும் விமான நிலையம் பலத்த பாதுகாப்புடன் திறக்கப்பட்டது. ஆனால் தற்போது விமான நிலைய ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக மீண்டும் விமான போக்குவரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓய்வு பெறும் வயது வரம்பில் மாற்றம், சம்பள உயர்வு, பணிச் சுமை ஆகிய பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விமான நிலைய பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுடைய போராட்டத்தால் கடந்த 2 தினங்களாக பிரசெல்ஸ் விமான நிலையத்தின் பல்வேறு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. வேலை நிறுத்தத்தின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதோடு, 7 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. அதனையடுத்து நேற்று புதன் கிழமை 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விமான நிலைய ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இந்த போராட்டம் முடிவுக்கு வரும் என நம்புவதாகவும் பிரஸ்சல்ஸ் அரசு அதிகாரி ஒருவர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Chennai Today News: 50 flights cancelled at Brussels airport due to strike

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *