shadow

50-வது பிறந்தநாள் கொண்டாடிய உலகின் முதல் ஏடிஎம்!

ஏடிஎம் இல்லாத வாழ்க்கையை நினைத்துப்பார்க்க முடியுமா. பர்ஸில் பணம் இல்லையென்றால், ஏடிஎம்-மை நோக்கித்தான் ஓடுவோம். நமது வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துவிட்ட ஏடிஎம் இயந்திரத்தை, பிரிட்டனின் புகழ்பெற்ற பார்க்லேஸ் வங்கிதான் முதன்முதலில் உலகுக்கு அறிமுகப்படுத்தியது. ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஸ்டெஃபர்ட் ஃபாரன் என்பர்தான் ஏடிஎம் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.

வடக்கு லண்டனில் உள்ள என்ஃபீல்டு என்ற இடத்தில், கடந்த 1967-ம் ஆண்டு, ஜூன் 27-ம் தேதி பார்க்லேஸ் வங்கியின் முதல் ஏடிஎம் இயந்திரம் செயல்படத் தொடங்கியது. பிரிட்டன் நடிகர் ரெக் வார்னே, இந்த ஏடிஎம்-மில் பணம் எடுத்த முதல் வாடிக்கையாளர். இந்த ஏடிஎம் நிறுவப்பட்டு நேற்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்தன. உலகின் முதல் ஏடிஎம்-மின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று பணம் எடுக்க வந்தவர்களுக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

தற்போது, உலகம் முழுக்க 30 லட்சம் ஏடிஎம் இயந்திரங்கள் இயங்குகின்றன. அதில், பிரிட்டனில் மட்டும் 70 ஆயிரம் உள்ளன.

Leave a Reply