அமெரிக்க செய்தி நிறுவனத்தில் துப்பாக்கிச்சூடு; பலியானாவர்களுக்கு டிரம்ப் இரங்கல்

அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனம் ஒன்றில் மர்ம நபர் ஏற்படுத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர். பலியானவர்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள மேரிலேண்ட் மாகாணத்தின் அன்னபோலிஸ் என்ற பகுதியில் உள்ள தி கேப்பிடல் கெஜட் செய்தி நிறுவனத்தில் நேற்று திடீரென துப்பாக்கிச்சூடு நடந்தது. முதலில் அலுவலகத்தின் வரவேற்பு அறைக்கு நுழைந்த மர்மநபர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 5 பேர் பலியாயினர். இதில் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய நபர் அதிரடியாக சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த துப்பாக்கி சூடு குறித்தும், துப்பாக்கி சூடு செய்த நபரை உடனடியாக பிடித்த காவல்துறையினர்கள் குறித்து தனது டுவிட்டரில் அதிபர் டிரம்ப் கூறியதாவது: ,‘மேரிலேண்ட்டில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன். விரைந்து செயல்பட்டு மர்ம நபரை பிடித்த காவல்துறையினர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *