அங்கோவாட் இந்து கோவில் அருகே ஆபாச நடனம் ஆடிய 5 பிரிட்டிஷார் கைது

உலகின் மிகப்பழமையான இந்து கோவில்களில் ஒன்றான அங்கோவார் இந்து கோவில் அருகே பிரிட்டனை சேர்ந்த சுற்றுலா குழு ஒன்று ஆபாச நடனம் ஆடிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 5 பிரிட்டிஷாரை கைது செய்துள்ளனர்.

அங்கோவார் இந்து கோவில் அருகே நைட் கிளப்புகளில் இருப்பது போன்று ஆபாச உடையணிந்து ஆபாச போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமுக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து இதுகுறித்து புகார் செய்யப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் இந்த ஆபாச நடனத்தில் கலந்து கொண்ட பெண்கள் உள்பட பத்து பேர்களை விசாரணை செய்த போலீசார் பின்னர் ஐந்து ஆண்களை மட்டும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *