shadow

5 மாநில தேர்தல் முடிவுகள் மோடி அலைக்கு ஏற்பட்ட பின்னடைவு அல்ல! இல. கணேசன்

நடைபெற்று முடிந்த ஐந்து மாநில தேர்தல்களில் ஒரு மாநிலத்தில் கூட பாஜக மெஜாரிட்டி பெறவில்லை. எனவே ஏற்கனவே ஆட்சி செய்து வந்த ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஷ்கர் மாநிலங்களை பாஜக இழக்கின்றது.

இந்த நிலையில் 5 மாநில தேர்தல் பின்னடைவு மோடி அலைக்கு ஏற்பட்ட பின்னடைவு அல்ல என்றூ பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். மேலும் எதிர்க்கட்சிகள் ஓரணியாக சேர்வது மாநிலத்தில் சாத்தியமாகுமே தவிர, மத்தியில் சாத்தியமாக வாய்ப்பில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் மாநில அளவில் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேச கட்சிகள் கூட்டணி அமைத்தும் வெற்றி பெறவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply