5 நாட்கள் தொடர் விடுமுறை: எதிர்பார்த்த வாக்குகள் பதிவாகுமா?

ஒவ்வொரு குடிமகனும் தேர்தலின்போது வாக்களிக்க வேண்டும் என்று அரசும், சமூக ஆர்வலர்களும் அறிவுறுத்தி வரும் நிலையில் தேர்தல் தேதியின்போது ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் பொதுமக்கள் விடுமுறையை கழிக்க வெளியூர் செல்ல வாய்ப்பு இருப்பதால் எதிர்பார்த்த வாக்குப்பதிவு நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது

வழக்கம் போல் தேர்தல் அன்று பொது விடுமுறை விடப்படுகிறது. தேர்தலுக்கு முந்தைய நாள் 17-ம் தேதி மகாவீர் ஜெயந்தியும், தேர்தலுக்கு அடுத்த நாள் 19-ம் தேதி புனித வெள்ளியும் அரசு விடுமுறை நாளாகும். இதனை தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வருவதால் மொத்தம் 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. இந்த விடுமுறை வாக்கு சதவீதத்தை பாதிக்கும் என்று, அரசியல் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் ஏப்ரல் 13ஆம் தேதி சனிக்கிழமை, 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு விடுமுறை தினங்கள் என்பதால் 16, 17 ஆம் தேதிகள் மட்டும் விடுமுறை எடுப்பவர்களுக்கு தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply